-மட்டக்களப்பு நிருபர்-
உலகத்தன்மம் சமூக அமைப்பின் மண்முனை வடக்கு பிரிவின் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரிவு திட்ட செயற்பாட்டுக் குழுவின் தலைவியும் கல்வி செயற்பாட்டு அதிகாரியுமான திருமதி திருமலர்ச்செல்வி மரியநாயகம், அமைப்பின் மண்முனை வடக்கு திட்ட செயற்பாட்டுக் குழு பொருளாளரும் சமூக அபிவிருத்தி அதிகாரியுமான இ.செல்லத்தம்பி சுரேஷ், அமைப்பின் மண்முனை வடக்கு பிரிவு திட்ட செயற்பாட்டுக் குழுவின் செயலாளரும் சமூக கலாசார செயற்பாட்டு அதிகாரியுமான திருமதி கமல்ராஜ் சகுந்தலா, அமைப்பின் மண்முனை வடக்கு விவசாயத்துறை அதிகாரி பாக்கியம் ஜோச் எட்வேட் ஆகியோரின் ஒருங்கிணைந்த செயற்பாடாக திருப்பெருந்துறை வடபத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் பயன் தரும் மரங்களும் நிழல் தரும் மரக்கன்றுகளும் நேற்று செவ்வாய்க்கிழமை நடப்பட்டன.
இந்நிகழ்வு அமைப்பின் ஸ்தாபகர் செ.ரா.பயஸ் ராஜேந்திரத்தின் மகன் அண்கணாளனின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது ஆலய நிர்வாகத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










