மசகு எண்ணெய் உற்பத்தியில் வீழ்ச்சி

கடந்த மாதம் முதல் ஒபெக் அமைப்பு தமது நாளாந்த உற்பத்தியை 1.2 மில்லியன் பீப்பாய்களால் குறைக்க நடவடிக்கை எடுத்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மசகு எண்ணெய் உற்பத்தியில் பாரிய அளவில் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் சவூதி அரேபியாவும் ஒரு மில்லியன் பீப்பாய்களால் தமது உற்பத்தியை குறைக்க தொடங்கியுள்ளது.

தற்போது உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 86 அமெரிக்க டொலராகவும் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை நேற்று சனிக்கிழமை 87 அமெரிக்க டொலரை அண்மித்திருந்ததாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.