இந்தியா – உத்தரப்பிரதேசம், லக்னோவில் இளைஞர் ஒருவர், தனது தாய் மற்றும் 4 சகோதரிகளைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக ஆக்ராவிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவிற்கு வருகை தந்த நிலையில், கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரான அர்ஷத் (வயது 24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச தலைநகரின் நாகா பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஷரன்ஜீத்தில், ஒரு அறைக்குள் இருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர் கொலையை காணொளியாக பதிவு செய்து ஒன்லைனில் பகிர்ந்துள்ளார்.
அதில், தனது தாய் மற்றும் சகோதரிகளின் உயிரற்ற உடல்களைக் காட்டி, அவர்களை எப்படிக் கொன்றார் என்பதையும் விளக்கியுள்ளார்
அர்ஷத் தனது தந்தை, தாய் மற்றும் நான்கு சகோதரிகளுடன் புத்தாண்டைக் கொண்டாட ஆக்ராவிலிருந்து லக்னோவுக்கு வந்துள்ளார்.
டிசம்பர் 31ஆம் திகதி, குற்றம் சாட்டப்பட்டவர் தனது குடும்பத்தினரை அஜ்மீருக்கு அழைத்துச் சென்றதுன் உத்தரபிரதேச தலைநகருக்குத் திரும்பிய பின்னர் அவர்களை ஒரு ஹோட்டலில் தங்க வைத்தார்.
அவர் தனது தாயின் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து, இரவில் அவரது வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார். அதேபோல், தனது சகோதரிகளின் வாயில் துணியை திணித்து, அவர்களின் மணிக்கட்டுகளை அறுத்துள்ளார்.
அண்டை வீட்டாரால் குடும்பம் துன்புறுத்தப்படுவதாக அர்ஷத் கூறியதாகவும், தனக்கு ஏதாவது நடந்தால் அவர்களின் பாதுகாப்பு குறித்து அஞ்சியதாகவும் மத்திய மண்டல துணை ஆணையர் ரவீனா தியாகி கூறியதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பயத்தால் உந்தப்பட்டு, அவர்களைக் கொல்ல அர்ஷத் முடிவு செய்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது தந்தையை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்ட பிறகு, பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தனது நான்கு சகோதரிகள் மற்றும் தாயைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இதன்படி, பிளேடு மற்றும் துப்பட்டா உள்ளிட்ட கொலைப்பு பயன்படுத்திய ஆயுதங்களை பொலிஸார் மீட்டனர்,
அலியா (9), அலிஷியா (19), அக்சா (16), ரஹீமான் (18) மற்றும் அவர்களது தாய் அஸ்மா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், தடயவியல் குழுக்கள் மற்றும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அர்ஷாத்தின் தந்தையான பதர் என்பவரும் பொலிஸாரால் சந்தேக நபராகப் பெயரிட்டுள்ளார்.
குறித்த நபர் தலைமறைவாக உள்ளதால், அவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரால் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.