முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கிரிபத்கொடையில் உள்ள அரசாங்க நிலத்தை போலி பத்திரங்களை தயாரித்து விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பில் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.