கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம்தர அதிகாரியான ஏ.ரி.எம். றாபி நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று திங்கட்கிழமை இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடியை சேர்ந்த, இலங்கை நிர்வாக சேவையின் முதலாம்தர அதிகாரியான ஏ.ரி.எம். றாபி, கடந்த 2025 ஜனவரி 01 முதல் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையில், அவருக்கு இப்பதவி உயர்வு கிடைக்கப் பெற்றுள்ளது.
அதற்கு முன்னதாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும், அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.