எதிர்வரும் காலங்களில் மாகாண பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்