அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஒப்புதலுக்கு உட்பட்டு, தங்களது போர்நிறுத்தத்தை நீடிப்பதற்கான ஆரம்பக்கட்ட உடன்பாட்டை அமெரிக்காவும் ஈரானும் நேற்று வியாழக்கிழமை எட்டியுள்ளன.
இந்த விவகாரத்தை நன்கு அறிந்த ஒரு நபரால் பெறப்பட்ட தகவலின்படி, இரு தரப்பும் போர்நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீடிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிற்கு சம்மதித்துள்ளதாக ரொயிட்டர்ஸ் தகவல் வௌியிட்டுள்ளது.
எனினும், இந்தத் திட்டத்திற்கு இன்னும் ட்ரம்பின் இறுதி அங்கீகாரம் தேவைப்படுகிறது. இந்தச் செய்தி முதன்முதலில் ‘அக்சியோஸ்’ (Axios) ஊடகத்தால் அறிக்கையிடப்பட்டுள்ளது.
60 நாட்கள் காலப்பகுதியில் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்கள் வெளியானதை அடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் தங்களது போக்கை மாற்றி சரிவை நோக்கி நகரத் தொடங்கின.