மாலைதீவின் லங்கன்பினோல்ஹு (Lankanfinolhu) பகுதியில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான 21வது ஆசிய ஊடக உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாளை செவ்வாய்க்கிழமை (12) மாலைதீவு புறப்படுகிறார்.
மே 14 வரை நடைபெறும் இம்மாநாட்டில் பிராந்திய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஊடக நிறுவன தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தின்படி, உச்சிமாநாட்டின் நான்காவது அமர்வில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முக்கிய உரையாற்றவுள்ளார்.
இதன்போது ஊடகக் கொள்கை, ஊடகவியலாளர்களின் தொழில்முறை மற்றும் பொதுத் தேவைகளை நிறைவேற்றுவதில் தொடர்பாடல் பொறுப்புகள் குறித்து அவர் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.