இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் முத்தரப்பு தொடருக்கான இந்திய ‘ஏ’ கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் போட்டியை நடத்தும் இலங்கை ‘ஏ’, இந்தியா ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளன.
தம்புள்ளையில் நடைபெறவுள்ள இந்த தொடரில் இந்திய ஏ அணியின் தலைவராக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரியான் பராக் உப தலைவராகச் செயற்படுவுள்ளார்.
திலக் வர்மா தலைமையிலான இந்த அணியில் பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ், பிரப்சிம்ரன் சிங், குமார் குஷாக்ரா, விப்ராஜ் நிகாம், யாஷ் தாகூர், யுத்வீர் சிங், அன்ஷுல் காம்போஜ், அர்ஷாத் கான் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை முத்தரப்பு ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, இலங்கை ‘ஏ’ மற்றும் இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஒன்றும் காலியில் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டிகளுக்கான கிரிக்கெட் அணி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.