நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை நிராகரித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டி கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த ரிட் மனுவானது கடந்த 18 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரோஹான்த அபேசூரிய தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டு, அது தொடர்பான தீர்மானத்தை இன்று அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கமைய, குறித்த மனுவை நிராகரிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.









