அமெரிக்க டொலருக்கு எதிராக, இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை சற்று அதிகரித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை பெரும்பாலான வங்கிகளில் 334 முதல் 335 ரூபாய் வரையில் பதிவாகியுள்ளது.
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை மாற்றமின்றி 326.75 ரூபாயாகவும், விற்பனை விலை 336 ரூபாயாகவும் காணப்படுகிறது.
NDB வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 326.50 ரூபாயிலிருந்து 326.10 ரூபாயாகவும், விற்பனை விலை 335.50 ரூபாயிலிருந்து 335.10 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 327.17 ரூபாயிலிருந்து 326.57 ரூபாயாகவும், விற்பனை விலை 335.28 ரூபாயிலிருந்து 334.67 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 325.09 ரூபாயிலிருந்து 324.84 ரூபாயாகவும், விற்பனை விலை 335 ரூபாயிலிருந்து 334.75 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
சம்பத் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 327 ரூபாயிலிருந்து 326.75 ரூபாயாகவும், விற்பனை விலை 335 ரூபாயிலிருந்து 334.75 ரூபாயாகவும் குறைந்துள்ளது.









