கிரிந்திவெல பகுதியில், 75 வயதான தனது மனைவியை கொலை செய்ததாகக் கூறப்படும் 76 வயதான நபர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
மில்லத்தே, கொஹிலாகல வீதியில் அமைந்துள்ள குறித்த தம்பதியினரின் வீட்டில், நேற்று செவ்வாய்க்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், தனது மனைவி கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அந்த நோயின் வலியிலிருந்து தனது மனைவியை விடுவிக்க அவரை கொலை செய்ததாகவும், அதன் பின்னர் தானும் தற்கொலை செய்ய முடிவு செய்திருந்ததாகவும், கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தாம் உயிரிழந்த பின்னர் இருவரின் உடல்களையும் ஒன்றாக சேர்த்து நல்லடக்கம் செய்யுமாறு அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர், வேயங்கொடை பகுதியில் ரயில் முன் பாய்ந்து குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










