மட்டக்குளி பகுதியில், கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில், மூவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய காரின் Dash Cam காட்சிகள் வெளியாகியுள்ளன.
வாகனம் திடீரென தனது கட்டுப்பாட்டை மீறி தானாகவே வேகத்தை அதிகரித்ததாக, விபத்துக்குள்ளான மின்சார காரை செலுத்திய சாரதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









