தண்ணீர் போத்தல்களுக்கு கட்டுப்பாட்டு விலை?

சந்தையில் தற்போது 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் 500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை 70 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என மத்திய மாகாண இயற்கை கனிய நீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கண்டியில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அந்த சங்கத்தின் அழைப்பாளர் சபுமல் குமார இதனைத் தெரிவித்தார்.

இதன்படி தண்ணீர் போத்தல்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்