தெமட்டகொடையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன், 23 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை இரவு டெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிதம்ம மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘டி-கட்டாஸ்’ வகையைச் சேர்ந்த நான்கு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.










