அமெரிக்காவின் – டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளது.
அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நான்கு நாட்கள் கடந்துள்ளன.
இந்தநிலையில், காணாமல் போயுள்ள அனைவரும் உயிர்பிழைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக டெக்சாஸ் மாநில ஆளுநர் கிரெக் அபோட் தெரிவித்துள்ளார்.
வெள்ளப்பெருக்கினால் இதுவரை 111 பேர் வரை இறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.