செம்மணி மனிதப் புதைக் குழியில் இருந்து இன்றைய தினம் மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதியுடன், 11 என்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைக்குழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 11 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது.
இதன் போது 13 என்பு கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டுத் தொகுதிகளில், சிறுவர்களுடைய மூன்று என்பு கூட்டுத் தொகுதிகள் உட்பட 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் செம்மணி மனித புதைக் குழியில் இதுவரை நடைபெற்ற அகழ்வு பணிகளில் 296 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 290 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இன்றைய அகழ்வு பணிகளின் போது, என்புக்கூடு ஒன்றுடன் தகர வடிவிலான பொருள் ஒன்று மீட்கப்பட்டு, அது சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை அகழ்வு பணிகள் இடம்பெறாது எனவும், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை அகழ்வு பணிகள் இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.