கடந்த வருடம் இறுதியில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் உடதும்பர, கங்கொட பகுதியில் வசித்து வந்த தல்கஸ்பிட்டிய கம்லத்கே ஹசித உதயங்க என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 13 உறவினர்கள் உயிரிழந்தனர். அவரது வீடு உட்பட அனைத்து சொத்துகளும் மண்சரிவினால் முற்றாக சேதடைந்தன.
பாதிகப்பட்ட குடும்பத்திற்கு புதிய வீடொன்றை வாங்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி
வழங்கிய வாக்குறுதிக்கமைய, கொடகவெல பிரதேச செயலகப் பிரிவின் மெத்தேகம, ஆசிரி மாவத்தையில் அமைந்துள்ள புதிய காணிக்காக 50 லட்சம் ரூபா நிதியுதவியினை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று கொடகவெல பிரதேச செயலகத்தில் நிதியுதவிக்கான காசோலையை பயனாளிக்கு வழங்கி வைத்தார்.
இந்த உதவியின் மூலம் பாதிகப்பட்ட குடும்பம் புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்கான அடித்தளமாக அமையும் என பிரதி அமைச்சர் இதன்போது தெரிவிதார்.