சில ஐஃபோன் வகைகளில் வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
மே 5ஆம் திகதி முதல் சில பழைய ஐஃபோன்களில் வட்ஸ்அப் (WhatsApp) சேவை இடைநிறுத்தப்படவுள்ளது.
அதன்படி ஐஃபோன் 5எஸ் (iPhone 5s), ஐஃபோன் 6 (iPhone 6) மற்றும் ஐஃபோன் 6 பிளஸ் (iPhone 6 Plus) ஆகிய வகைகளில் வாட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மே 5ஆம் திகதியில் இருந்து சில வகை ஐஃபோன்களில் வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் மெட்டா நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், 5 மாதங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்