சுங்கத் திணைக்களத்தின் பச்சை வாசல் ஊடாக, 60 இற்கும் மேற்பட்ட பொதிகளில் அடைக்கப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை, சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட முயற்சியை சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வியட்நாம் நாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கத் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினரால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










