ஆப்கானிஸ்தானின் – கந்தஹர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக பிராந்திய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச ஊழியர்கள் சம்பளம் பெறுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த வங்கி ஒன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் மூன்று பேர் மாத்திரமே உயிரிழந்ததாக தலிபான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.