நாட்டின் நிதி அமைப்பில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளால் 800 மில்லியன் ரூபாய்க்கும் (80 கோடி) அதிக பணம் இழக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அந்நியச் செலாவணி விகிதப்படி கணக்கிட்டால் இந்த இழப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து ஜனவரி மாதமே ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டும், ஜனாதிபதி, நிதிச் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆகியவை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் “உறங்கிக் கொண்டிருப்பதாக” அவர் விமர்சித்துள்ளார்.
அரசு நிறுவனங்களுக்குள் பொறுப்புக்கூறல் தன்மை அற்றுப் போயுள்ளதாகவும், இதனால் பொதுமக்களின் நம்பிக்கை குறைந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாகவும், பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரிவினைவாதத்திற்கு நாட்டில் இடமில்லை என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஹொரணையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே நாமல் ராஜபக்ஷ இந்த அதிரடி கருத்துக்களை முன்வைத்தார்.