தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கடந்த 2025 டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி இரண்டு சிங்க குட்டிகள் பிறந்தது.
இப்போது அந்த சிங்கக்குட்டிகள் பிறந்து ஏழரை மாதங்கள் ஆன நிலையில் அவற்றுக்கு பெயரிட பொதுமக்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தெஹிவளை மிருக காட்சி சாலைக்கு வருகை தருகின்றவர்கள் 2 சிங்க குட்டிகளுக்கும் விரும்பிய பெயர்களை எழுதி அங்கு பிரத்தியேகமாக வைக்க பட்டுள்ள பெட்டியில் இடலாம். குழுக்கள் முறையில் அந்த பெயர்களில் 2 பெயர்களை தேர்ந்தெடுத்து சிங்கக்குட்டிகளுக்கு பெயரிடப்படும் என விலங்கியல் வைத்தியர் தீபிகா சொனாதரா தெரிவித்துள்ளார்.