நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ரோஸ் டெய்லர் கடந்த 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.
நியூசிலாந்து அணிக்காக 450 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 18,199 ஓட்டங்களை குவித்துள்ளார் .
இதில் டெஸ்ட் போட்டிகளில் 7683 ஓட்டங்களையும் , ஒருநாள் போட்டிகளில் 8607 ஓட்டங்களையும் மற்றும் டி20 போட்டிகளில் 1909 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
இந்நிலையில் 3 வருடங்களின் பின்னர் ரோஸ் டெய்லர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் களத்திற்கு திரும்ப உள்ளார்.
இதன்படி அவர் சமோவா அணிக்காக களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஸ் டெய்லரின் வருகை சமோவா அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.