எமிரேட்ஸ் விமான நிறுவனத்துடனான கூட்டாண்மை முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2008ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதுவரை 528 பில்லியன் ரூபாய் ஒட்டுமொத்த நட்டத்தைச் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட பிரச்சினை ஒன்றின் காரணமாக எமிரேட்ஸ் நிறுவனத்துடனான கூட்டாண்மையை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்ததைத் தொடர்ந்து இந்த நட்டம் ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எமிரேட்ஸ் நிறுவனத்துடனான 10 ஆண்டுகால முகாமைத்துவ ஒப்பந்தம் 2008 மார்ச் மாதத்தில் முடிவுக்கு வந்ததையடுத்து, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை இலங்கை அரசாங்கம் மீண்டும் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.










