பலாங்கொடையில் பெருமளவிலான சட்டவிரோத மதுபானம் மற்றும் அதனைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வலேபொட உடகந்த பகுதியில் சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, 100 போத்தல்களுக்குச் சமமான 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மூன்று பீப்பாய்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 510 லீற்றர் கோடாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










