களுத்துறையில் உணவக உரிமையாளரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள உணவகத்திற்குள் கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது உணவக உரிமையாளரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
கொலைச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், களுத்துறை பிரிவுக்குட்பட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்குப் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.










