நிகவெரட்டிய பகுதியில் பழங்காலப் பொருட்கள் மற்றும் புதையல்களைத் தேடி வீடொன்றுக்குள் சட்டவிரோதமாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிகவெரட்டிய பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், திவுல்லேகொட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, எவ்வித சட்ட அனுமதியும் இன்றி குறித்த வீட்டுக்குள் சந்தேகநபர்கள் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து வந்தமை பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் மத வழிபாட்டு காணிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் 20 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் திவுல்லேகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிகவெரட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (படம் AI)










