மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கணவரின் தண்டனையைத் தளர்த்துவதற்காக சரண குணவர்தனவின் மனைவி லஞ்சம் வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், லஞ்சம் பெறுவதற்கு ஆதரவளித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.










