ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சிக்குச் சென்றுகொண்டிருந்த K2 ஏர்வேஸின் போயிங் 737-400 சரக்கு விமானத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதை அடுத்து, அதன் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானம் நேற்று (08) செவ்வாய்க்கிழமை இரவு ஷார்ஜாவிலிருந்து கராச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் நேரப்படி இரவு 9.21 மணியளவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்