கம்பஹா – ராகம பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் தனது கணவருடன் வீட்டில் வசிப்பதாகவும், சம்பவத்தன்று கணவர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்