17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
முதலாவது போட்டியில் சென்னை மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில், 174 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.