2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் எரிபொருள் நுகர்வு மற்றும் எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று செவ்வாய்க்கிழமை வெளிப்படுத்தியுள்ளார்.
உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப, இறக்குமதிச் செலவுகள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.
இதன்படி, ஜனவரி மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கம் 186 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ள போதிலும், மே மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கத்திற்கு 521 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட நேரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.