இறக்காமம் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஒரு மௌலவி என்று பொலிஸ் வெளியிட்ட அறிக்கை தவறானது என அகில இலங்கை ஜம்ய்யத்துல் உலமாவின் இறக்காமம் கிளை மறுத்துள்ளது.
அந்த நபர் சான்றளிக்கப்பட்ட மௌலவி அல்ல என்றும், எந்தவொரு அரபுப் பள்ளியிலும் கல்வி கற்கவில்லை என்றும் அகில இலங்கை ஜம்ய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட அந்த நபர் ACJU அல்லது அதன் இரக்காமம் கிளைகளில் உறுப்பினராக இல்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக, மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸ் இன்று திங்கட்கிழமை தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
