இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன இலங்கை இராணுவத்தின் 69 வது பதவி நிலை பிரதானியாக இராணுவத் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை பதவியேற்றார்.
அவர், மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை அளித்து, பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு அடையாளப்பூர்வமாகப் பதவியேற்றார்.
மாத்தறை புனித சர்வேஸஸ் கல்லூரியின் பழைய மாணவரான மேஜர் ஜெனரல் பிரேமரத்ன, இப்பதவியை ஏற்கும் முன்னர் அவர் இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதனியாக பதவி வகித்ததுடன் இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் தற்போதைய படைத் தளபதியாகவும் பணியாற்றுகின்றார்.