படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் நிமலராஜனின் வழக்கு தொடர்பான அறிக்கை இன்று வியாழக்கிழமை மாலை திருகோணமலை வெளிக்கடை தியாகிகள் திறந்த வெளி அரங்குக்கு முன்னால் வடகிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து உணர்வு பூர்வமாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு நினைவு கூறப்பட்டு ஊடகப் படுகொலை தொடர்பாகவும் நிமலராஜனின் படுகொலை தொடர்பாகவும் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது.
இதில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த பிரதேச ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் .
குறித்த படுகொலை செய்யப்பட்ட ஊடகரின் வழக்கு தொடர்பிலான அறிக்கை அடங்கிய புத்தகம் விநியோகிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிப்பொறி முறை ஊடாக நீதியை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். என இதில் கலந்து கொண்ட சிவிற் சமூக செயற்பாட்டாளர்கள் இதன் போது தெரிவித்தனர்.