உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை நிலவரங்களின்படி, பிரெண்ட் ரக (Brent) மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 109 டொலராக பதிவாகியுள்ளது.
இது முந்தைய தினத்துடன் ஒப்பிடுகையில் 7.78% அதிகரிப்பாகும்.
அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 111.5 டொலராக பதிவாகியுள்ளது.
இது 11.41% என்ற பாரிய விலை அதிகரிப்பாகும்.