வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் “அர்னாப்” (Arnab) புயலின் மறைமுகத் தாக்கங்கள் காரணமாக, எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதற்கமைய, வடக்கு, மேல், தென், சப்ரகமுவ, வடமேல், மத்திய, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இன்று முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை 100 – 150 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.










