கிளிநொச்சி கனகபுரம் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த காணொளியில் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து உணவகத்தின் வாயிலை அடித்து சேதப்படுத்துவது பதிவாகியுள்ளது
சம்பவத்தில் பிரதான வாயில் சேதப்படுத்தப்பட்டு நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.