இலங்கை விமானப்படையின் விளையாட்டுத்துறையில் சிறப்பான சாதனைகளைப் படைத்து, விமானப்படைக்குப் பெருமை சேர்த்த சார்ஜன்ட் ருமேஷ் தரங்க பதிரகே மற்றும் கோப்ரல் எரந்தி டபிள்யூ.பி. ஆகியோருக்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிசிங்கே பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.
இலங்கையின் சாதனை படைத்த ஈட்டி எறிதல் வீரரான சார்ஜன்ட் ருமேஷ் தரங்க பதிரகே மற்றும் இலங்கை விமானப்படை மகளிர் கரப்பந்தாட்ட அணியின் தலைவியான கோப்ரல் எரந்தி ஆகியோரின் விளையாட்டுச் சாதனைகள் மற்றும் விமானப்படைக்கான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் பாராட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் இலங்கை விமானப்படைக்கு அங்கீகாரத்தையும் பெருமையையும் தேடித்தந்த அவர்களின் சாதனைகள் இதன்போது பாராட்டப்பட்டன.
விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற விமானப்படைத் தளபதியின் ஆய்வுப் பயணத்தின்போதே இந்தப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விமானப்படையின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதில் அவர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இதன்போது அங்கீகரிக்கப்பட்டன.










