சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணிக்கு 155 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் பர்வேஸ் ஹொசைன் எமோன் அதிகபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் மஹீஷ் தீக்ஷன இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
நுவான் துஷார, தசுன் சானக்க மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
அதன்படி, 155 என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி இன்னும் சற்று நேரத்தில் துடுப்பெடுத்தாட உள்ளது.