அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 73 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாய் 17 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377 ரூபாய் 62 சதம், விற்பனைப் பெறுமதி 392 ரூபாய் 38 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 25 சதம், விற்பனைப் பெறுமதி 332 ரூபாய் 73 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் , விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 54 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 96 சதம், விற்பனைப் பெறுமதி 209 ரூபாய் 15 சதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்