இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாய் முதல் 337 ரூபாய் வரை பதிவாகியுள்ளது.
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.20 ரூபாயாகவும், விற்பனை விலை 337.45 ரூபாயாகவும் மாற்றமின்றித் தொடர்கிறது.
என்.டி.பி. வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 327.90 ரூபாயிலிருந்து 328.10 ரூபாயாகவும், விற்பனை விலை 336.90 ரூபாயிலிருந்து 337.10 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 328.40 ரூபாயிலிருந்து 328.60 ரூபாயாகவும், விற்பனை விலை 336.54 ரூபாயிலிருந்து 336.75 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 326.63 ரூபாயிலிருந்து 326.82 ரூபாயாகவும், விற்பனை விலை 336.55 ரூபாயிலிருந்து 336.75 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியிலும் டொலரின் கொள்வனவு விலை 328.50 ரூபாயிலிருந்து 328.75 ரூபாயாகவும், விற்பனை விலை 336.50 ரூபாயிலிருந்து 336.75 ரூபாயாகவும் உயர்வடைந்துள்ளது.










