ரத்கம, மாலிதுவ பகுதியில் உள்ள மைதானமொன்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










