அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் ராஜாங்கனே சத்தரத்தன தேரர் உள்ளிட்ட 11 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று வியாழக்கிழமை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளை மீறி பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினர் ருவன்வெலிசாயவுக்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தொடர்ந்து குறித்த குழுவினர் கடந்த நவம்பர் 12ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










