இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே (Banda Aceh) பகுதிக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலில் இன்று சனிக்கிழமை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எனினும் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையத்தின் தகவலின்படி, 2026 நவம்பர் 21ஆம் திகதி பிற்பகல் 3.12 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 156 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம், தெற்கு அட்சரேகை 8.04 பாகை மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 127.57 பாகை பகுதியில் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணியளவில் வளிமண்டலவியல் திணைக்களம் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டது.
இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலைமையைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவிதமான சுனாமி அபாயமும் இல்லை என அந்த அறிவிப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.











