இசைக்குழுவினர் சென்ற வேன் கால்வாய்க்குள் வீழ்ந்து விபத்து

பொலன்னறுவை எஃபெக்ட் பேண்ட் இசைக்குழுவினர் பயணித்த வேன் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொலன்னறுவை ஓங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இன்று புதன் கிழமை காலை திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் இசைக்குழுவினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் வேன் சேதமடைந்துள்ளது.

மேலும் அதே இசைக்குழுவைச் சேர்ந்த கலைஞர் ஒருவரே வேனை  செலுத்திச் சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்