வடகிழக்கு லண்டனில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 14வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
வடகிழக்கு லண்டனில் ஹைனால்ட்டில் (Hainault ) பகுதியில ஹைனால்ட்டில் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தற்போது ஊடகவியலாளர்கள் மத்தியில் விளக்கமளித்துள்ளனர்.
ஹைனால்ட்டில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் , சம்பவஇடத்தில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து பேரில் சிறுவனும் உள்ளடங்கியிருந்ததாகவும் இவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பொலிசார் அழைக்கப்பட்ட 22 நிமிடங்களுக்குப் பின்னர் 36 வயது நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் பொதுமக்களை தாக்குவதற்கு முன்னர் வாளுடன் குறித்த பகுதி வழியாக ஓடுவதை நேரில் பார்த்ததாக் விவரித்துள்ளனர்.
துர்லோ தோட்டப் (Thurlow Gardens) பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் காரினை மோதிவிட்டு , இவர் காலை 07:00 சற்று முன்னர் வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மருத்துவமனையில் இருப்பதாகவும் அவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சிறுவன் உட்பட மூன்று பொதுமக்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுவன் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரண்டு பொதுமக்களின் காயங்களும் உயிருக்கு ஆபத்தாக காயங்களாக இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது தனிஒரு நபரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எனவும் ,இது பயங்கரவாத தாக்குதல் இல்லை எனவும் , இது குறித்து பொது மக்கள் எவ்வித அச்சமும் அடைய தேவையில்லை என பொலிசார் ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


