அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.91 ரூபாவிலிருந்து 328.05 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.82 ரூபாவிலிருந்து 337.05 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய நாணயங்களுடன் ஒப்பிடுகையிலும் இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.










