யாழில் அண்ணனிடம் போதைப் பொருள் வாங்க வந்தவருடன் தங்கை வீட்டைவிட்டு ஓடியுள்ளார்.
சிறுமியின் சகோதரன் போதைப்பொருள் விற்பனையாளர் எனவும், அவரிடம் போதைப் பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் தினமும் போதைப் பொருளை பெற்று வந்துள்ளார்.இந் நிலையில் நண்பனுடைய தங்கையின் மீது போதைப் பொருள் வாங்க சென்றவருக்கு காதல் மலர்ந்தது. நெடு நாட்களாக மலர்ந்த காதல் காரணமாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 15 வயது தங்கை வீட்டை விட்டு காதலனுடன் வெளியேறியுள்ளார்.
இளவாலை பொலிசாருக்குத் இது தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










